இலங்கையின் 10 வங்கிகள், மின்சாரசபை உள்ளிட்டவற்றை தரமிறக்கியது பிட்ச் தரப்படுத்தல்!

பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம், இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை தரமிறக்கியுள்ளது.
பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தேசிய மதிப்பீட்டை ஏஏ மறை தரத்தில் இருந்து பி தரத்துக்கும், ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தேசிய மதிப்பீட்டை ஏஏ மறையில் இருந்து ஏ தரத்துக்கும், பிட்ச் தரமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மின்சார துண்டிப்பு இடம்பெற மாட்டாது - அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய!
சாவகச்சேரி நகராட்சி மன்ற தேர்தலில் ஒன்பது கட்சிகள் போட்டி!
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு...
|
|