இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் திருமலையில்!

Friday, July 13th, 2018

இலங்கையில் விரைவில் புதிதாக சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில் ஒன்றில் கூறியுள்ளார்.
நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறினார். இந்த திட்டம் திருகோணமலை அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள மூலோபாய திட்டத்தின் கீழ், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.
இந்த திட்டம் திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வரலாறுகளை மறைக்காது அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி...
பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
நாகப்பட்டிணம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல...