இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Wednesday, February 17th, 2021

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

கெரவலபிட்டிய திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600 -800 டொன் நகர திண்ம கழிவை பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்கான நினைவு பலகையை திறந்துவைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு நகரின் நகர திண்மக்கழிவை அகற்றுவதற்கு இதன்மூலம் நிலையான தீர்வொன்று ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த பிரதமர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திற்கும் இத்திட்டம் நிலையான தீர்வாக அமையும் என்றும் இதற்காக கொழும்பு நகர சபை, எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து பங்களிப்பு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் இத்திட்டத்திற்காக ரூபாய் 15 பில்லியனை செலவிட்டுள்ளது. மிகவும் அழகான சுத்தமான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும், குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றுமு; அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: