இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – அரச தலைவர் ரணிலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
Wednesday, July 27th, 2022
இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த 20 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாமதமாக தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவர் வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்குமென நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை மக்களின் பரஸ்பர நலனுக்காக அதிபருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக இந்திய பிரதமர் மீண்டும் வலியுறுத்துவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
000
Related posts:
|
|
|


