இலங்கையின் பொருளாதார நெருக்கடி – பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் ஜெய்சங்கர் விசேட ஆலோசனை!
Tuesday, April 5th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பொருளாதார பிரச்சினை குறித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை சந்தித்த ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாகிஸ்தானின் அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் தற்போது நிலவிவரும் இலங்கை பிரச்சினை குறித்து விரிவாக பிரதமர் நரேந்திர மோடியிடம் வெளியுறதுறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எடுத்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


