இலங்கையின் புதிய நிதித் திட்டம் தொடர்பில் நாணய நிதியத்தின் அறிவிப்பு!
Saturday, February 29th, 2020
இலங்கைக்கான புதிய நிதித் திட்டத்தை ஆராயவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிதித் திட்டம் ஆராயப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர் பாடல் திணைக்கள அதிகாரி ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையுடனான புதிய நிதித் திட்டம் எவ்வாறு அமையும் என கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்
Related posts:
அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம் !
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை - பணிப்பாளர் சத்தியமூ...
|
|
|


