இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரிப்பு!
Sunday, April 26th, 2020
இலங்கையில் மேலும் 8 கொரோனா கொரோனா வைரஸ் தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளிகனின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இரவுவரை 452 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மேலும் 8 போருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது வரையில் 2,920,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 203,269 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் புதிய பழ வகை அறிமுகம்!
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது நோக்கம் - நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் அரசாங...
வடக்கு - கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!
|
|
|


