இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பகுதியினர் கடுமையான எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021

நாட்டில் மேலும் இரண்டு ஆயிரத்து 796 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 27 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நாட்டில் நேற்றும் 98 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 17ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும்  5 ஆயிரத்தைக் கடந்துள்ளழம குறிப்பிடத்தக்கது.

Related posts: