இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக உயர்வு!

இலங்கையில் நேற்று புதிதாக 10 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 நோயாளிகளில் 9 பேர் கடற்படை சிப்பாய்கள் என அவர் தெரிவித்துள்ளார். மற்றைய நபர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி செயற்பட்டவர் என அவர் கூறியுள்ளார். இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 477 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 449 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
17 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி - பிராந்த...
வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு...
|
|