இலங்கையின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்ய தஜிகிஸ்தான் தயார் !
Thursday, December 15th, 2016
இலங்கையுடனான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமெலி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேயிலை, ஆடை, இரத்தினக்கல், ஆயுள்வேத உற்பத்திகள், வாசனைத் திரவியங்கள், பீங்கான் பொருட்கள், இறப்பர் உற்பத்திகள் என்பனவற்றை கொள்வனவு செய்வதற்கு தஜிகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் வர்த்தக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் உரையாற்றினார். அவர் இங்கு மேலம் உரையாற்றுகையில்: இலங்கையில் தற்போது முதலீடு செய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
தஜிகிஸ்தான் வர்த்தகர்கள் இலங்கையில் விரிவாக முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளனர். இலங்கை முதலீட்டாளர்களையும், தமது நாட்டிற்கு விஐயம் செய்து முதலீடுகளை மேற்கொள்ளமாறு தஜிகிஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் இரு தரப்பு வர்த்தகம் மேலும் விரிவடையும் என அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நீர் மின்சாரம், நிலைபேறான எரிசக்தி, உலோக உற்பத்தி போன்ற துறைகளிலும், குறிப்பாக மலை சார்ந்த சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்ய தேவையான உதவிகளை வழங்குவதாகவும், தஜிகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


