இலங்கையின் ஆசியாவின் இராணியை சொந்தமாக்குவதில் வல்லாதிக்க நாடகளிடையே கடும் போட்டி!

Thursday, December 16th, 2021

இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் இராணி’ என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை கொள்வனவு செய்வதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் 310 கிலோகிராம் எடைகொண்ட இந்த நீலக்கல், அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அந்தவகையில் தற்போது இணையத்தின் ஊடாக இடம்பெறும் சர்வதேச ஏல விற்பனையில், குறித்த நீலக்கல்லை முன்வைப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியம், ஆரம்பத்திலேயே விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ள நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய நிலையில் அமெரிக்காவும் வொஷிங்டன் நகரிலுள்ள நூதனசாலையில் குறித்த கல்லை காட்சிப்படுத்துவதற்காக ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் ‘ஆசியாவின் ராணி’ தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: