இலங்கையின் அவசர வேண்டுகோள் – 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!

இலங்கை விடுத்த அவசரவேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40 ஆயிரம் தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது.
கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன்உதவியின் கீழ் வழங்கப்படவுள்ள மாதாந்த எரிபொருள விநியோகத்திற்கு மேலதிகமாக அவசரமாக டீசலை வழங்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐஓசி இலங்கைக்கு 40,000 எரிபொருளை விரைவில் வழங்கவுள்ளது என இந்த விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியா இலங்கையின் அவசரவேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த சில வாரங்களாக எரிபொருளிற்கு திடீர் ௲ மோசமான பற்றாக்குறை நிலவுவதன் காரணமாகவே இலங்கை இ;ந்த வேண்டுகோளை விடுத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் உள்ளுர் தேவைகளை கருத்திலெடுத்த பின்னர் இலங்கைக்கு தேவையான டீசலை அனுப்புவது குறித்து ஆராயப்படுகின்றது, இவற்றை அனுப்புவதற்கான கப்பல்களை ஏற்பாடு செய்வதும் பிரச்சினையாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து எழுப்பியகேள்விகளிற்கு உரிய அமைச்சோ அல்லது ஐஓசியோ பதிலளிக்கவில்லை என தெரிவி;த்துள்ள இந்திய ஊடகம் உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதலை தொடர்ந்து உருவாகியுள்ள புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக விநியோக வழிமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக எரிபொருள் விநியோகத்திற்கான விநியோக வழிமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என பெயர் குறிப்பிடவிரும்பாத வர்த்தக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|