இலங்கையின் அரச தலைவர்களுக்கு சீன அரசாங்கம் புத்தாண்டு வாழ்த்து மடல் அனுப்பிவைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையெழுத்திட்ட புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீன அரசாங்கம் இலங்கை சபாநாயகர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தது.
அதன்படி தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) நிலைக்குழுவின் தலைவர் லி ஜான்ஷு சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை அனுப்பினார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துக்களை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை !
ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம் - யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்!
|
|