இலங்கையிடமிருந்து வருடாந்தம் 840 கோடி வருமானம் அபகரிப்பு!

Thursday, May 19th, 2016

சட்டவிரோத இலங்கையின் மீன்வளத்தை கொள்ளையடிப்பதன் ஊடாக வருடாந்தம் 840 கோடி ரூபா வருமானத்தை இந்திய மீனவர்கள் அபகரித்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்குப் பிராந்திய கடலில் தினமும் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழமையாகிவிட்டது. இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், அரசியல் அழுத்தங்களின் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்

இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வருடமொன்றுக்கு 840 கோடி ரூபா பெறுமதியான இலங்கையின் மீன்வளம் கொள்ளையடிக்கப்படுவதாக புள்ளிவிபரமொன்று தெரிவிக்கின்றது.

இதனைக் கருத்திற் கொண்டு இனிமேல் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யப் போவதாக மீன்பிடி, நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வருடமொன்றுக்கு சுமார் நாற்பதினாயிரம் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக வடபிராந்தியத்தில் வாழும் ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பின் போது இதற்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: