இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதை தடுக்க விசேட நடவடிக்கைகள் – கண்காணிப்பு பணியில் இந்திய கடலோரக் காவல்படையினர்!
Thursday, May 12th, 2022
வடப்பகுதியிலிருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதற்காக 16 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இருந்து 84 பேர் ஏற்கனவே இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ள நிலையில், மேலும் இருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்திய விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
நாட்டில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த ...
|
|
|


