இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!
Friday, June 15th, 2018
இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு வழங்குவது தொடர்பில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுகியே ஹதோயாமாவுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது ஜப்பானின் தொழிநுட்ப துறையில் இலங்கைப் பணியாளர்களை இணைத்துக்கொண்டு ஜப்பானால் வழங்கப்படும் பயிற்சிகளில் இலங்கையின் இளைஞர், யுவதிகளையும் இணைத்துக்கொள்வது குறித்த முதற்கட்ட உடன்பாடு தொடர்பில் இருதரப்பினராலும் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
Related posts:
மட்டக்களப்பில் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 - ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெய...
அன்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்க இலங்கையில் அனுமதி!
ஜுலை மாதம் இலட்சத்து 23 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அமைச்சர் ஹரிண் பெர்னான்டோ த...
|
|
|


