இலங்கைத் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு – ஐ.நா.!

Saturday, June 2nd, 2018

சரிவைச் சந்தித்த இலங்கைத் தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டு மீண்டிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஒழுங்கமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேயிலையின் உற்பத்தி பெருமளவில் வீழ்ச்சி கண்டிருந்தது.  எனினும் 2017ஆம் ஆண்டு தேயிலைஉற்பத்தியானது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில், கென்யாவை அடுத்து அதிக அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், சீனா, இந்தியா, கென்யாவை அடுத்து அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடாகவும்இலங்கை காணப்படுகிறது.

இந்நிலையில் 2027ஆம் ஆண்டளவில் கறுப்புத் தேயிலை உற்பத்தி 4.42 மில்லியன் டன்களாக அதிகரிக்கவுள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் 2.2 சதவீதம் என்ற அளவில் கறுப்புத் தேயிலையின் நுகர்வு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: