இலங்கைச் சிறுவர்கள் தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!

Saturday, June 16th, 2018

நாட்டில் 73.4 சதவீதமான ஒன்று தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வீட்டில் பெற்றோரால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தொடக்கம் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுள் 48.7 சதவீதமானவர்கள் முன்பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் அவர்களது மொழியாற்றல், சமுக இணைப்பு, உணர்வு ரீதியான முன்னேற்றங்களுக்கு சாதக நிலைமை சேர்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 வயதுக்கு குறைவானவர்களில் 17 சதவீதமானவர்கள் வறுமையில் வாடும் நிலையில் இருப்பதுடன் 15.1 சதவீதமான சிறார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: