இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தூதுக்குழு அமைச்சர் .மனுஷ நாணயக்காரவுடன் கலந்துரையாடல்!

Thursday, November 2nd, 2023

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தூதுக்குழு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் .மனுஷ நாணயக்காரவை சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (01) இடம்பெற்றது. திருமதி ஹெய்டி ஹவுடலா கிரீன்ஸ் (Ms. Heidi HAUTALA Greens, Finland, Vice President of the EP & Chair of the Delegation) தலைமையிலான குழுவினர், ஜி எஸ் பி, பிளஸ் சலுகையை இலங்கைக்கு தொடர்ந்து வழங்குவது குறித்து கலந்துரையாடினர்.

சர்வதேச தொழில் அமைப்பின் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய தொழில் சட்டமான, தொழில் பாதுகாப்பு சட்டம் குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டதாக பாலின சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் இதில் வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், புதிய சட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்புக்குமான ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த கலந்துரையாடலின் போது இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் கவனம் செலுத்தினார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் முகாமைத்துவத்துக்குமாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தேர்தல் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு வன்னி பிரதேசவாசிகளுக்கு கால அவகாசம் - தேர்தல் ஆணைக்குழு ...
இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெ...
ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு ...