இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்களுடன் செல்பி எடுக்க தடை – ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல்!
Monday, August 7th, 2023
எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது செல்பிக்களை கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மேலும் அவ்வாறான வருகைகள் பற்றிய எந்தவொரு தகவலும் அந்தந்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஜூலை 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, ஜனாதிபதி செயலக பணியாளர்கள், அவருடன் செல்பி எடுத்தது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பணியாளர்களால் எடுக்கப்பட்ட செல்பிக்களை வெளியிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்’கது
Related posts:
|
|
|


