இலங்கைக்கு வருகை தருகின்றார் யுனெஸ்கோ பணிப்பாளர் ஒட்ரே அசோலே – இலங்கைக்கான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்!

Saturday, July 13th, 2024

ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் ஒட்ரே அசோலே இலங்கைக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்

இவர் இலங்கை அரசின் பேரில் வருகை தரவுள்ள அவர், எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளி விவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்தித்து இலங்கைக்கான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளடங்கலாக பல் வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரி மையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பாடசாலை மூலம் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் - சுகாதார ...
தேர்தலுக்கு தடையான அரச அதிகாரிகளை விசாரிக்கக் கோரி மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் உயர்ந...
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற...