இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் !
Tuesday, June 20th, 2023
சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், பொறுப்புக்கூறல் தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளின் சில பகுதிகள் நிராகரிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜூன் மாத அமர்வில் அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது அமைப்புடன் தொடர்ச்சியாகக் கையாள்வதன் மூலம் அவரது பரிந்துரையைப் பின்பற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பிலான வாய்மொழி அறிக்கையை உயர்ஸ்தானிகர் சமர்பிக்க உள்ளார்.
இதேவேளை நேற்று (19) ஆரம்பமான இந்த அமர்வு ஜூலை 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிக விலையில் விற்பனை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்!
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப...
ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சு –கல்வி இராஜாங்க அமைச்சர்...
|
|