இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது!
Monday, September 26th, 2016
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயன்ற ஈரானியர் ஒருவர் நேபாளத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள விமான நிலையத்தில் மும்பாய்க்கு செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது அவரின் பயணப்பொதியில் இருந்து 1.7கிலோகிராம் ஹசீஸ் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது.
விசாரணைகளின் போது தாம் இலங்கைக்கு செல்லவுள்ளதாக குறித்த ஈரானியர் தெரிவித்துள்ளார்.தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் நிலையில் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவே ஹசீஸ் போதைப்பொருளை நேபாளத்தில் வந்து கொள்வனவு செய்ததாக குறித்த ஈரானியர் தெரிவித்துள்ளார்.

Related posts:
20 ஆவது திருத்துக்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லும் சஜித் தரப்பு!
தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உ...
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!
|
|
|


