இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோரின் கவனத்திற்கு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பொதிகள் அல்லது கப்பல்களில் எடுத்து வரப்படும் பொருட்களுக்காக எவருக்கும் சுங்கத் திணைக்களம் வரிச் சலுகைகளை வழங்குவதில்லை என்று அமைச்சரவையின் செயலாளர் சுமித் அபயசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவிருக்கும் பொதிகள், அல்லது கப்பல்களில் எடுத்து வரப்படும் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று கூறும் அமைச்சரவை அலுவலகத்தின் ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான போலி ஆவணங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுள்ளார்.
Related posts:
|
|