இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – ஐரோப்பிய ஒன்றிம் தெரிவிப்பு!

இலங்கைக்கான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தமையை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் கடன் மறுசீரமைப்பு, திறந்த சந்தைகள், நிதி ஒத்துழைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றினை விரைவாக அடைவதற்காக முயற்சிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் பொருளாதார ஆற்றலைத் அடைவதற்கு ஒரு கடினமான பாதை உள்ளது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
சட்டநாதர் வீதியில் இருவர் மீது வாள் வெட்டு
அரசியல் பழிவாங்கல்கள் விவகாரம் - பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து இம்மாத இறுதியில் ஆராய்வு!
பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
|
|