இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – பிரித்தானியா!
Thursday, March 2nd, 2017
மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்திற்கான பொதுநலவாய அமைச்சர் ஆலோக் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு இலங்கையில் போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட யோசனைகளை நிறைவேற்ற காலம் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
இலங்கை அருகே காற்றழுத்த தாழமுக்கம்!
நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு!
வெற்றிகரமாக வழங்கப்பட்டது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு – இராஜாங்க ...
|
|
|


