இலங்கைக்கு ஆபத்து – பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கை!
Tuesday, June 14th, 2016
இலங்கைக்கு கீழாக ஏற்பட்டு வரும் நிலநடுக்க வழி ஒன்றினால், இலங்கையில நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகிவருவதாகபேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு கீழாக 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்க வழி ஒன்று உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மலையகப் பகுதிகளில் பாறைகளின் மீது படிந்துள்ள மண், நிலையிழக்கும் என்றும், இதனால் பெரியளவில் நிலச்சரிவுகள் ஏற்படவாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வனவிலங்கு பூங்காவில் பாரிய நட்சத்திர ஆமை!
70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு!
பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இணைவு!
|
|
|


