இலங்கைக்கு ஆதரவளிக்கும் கடமைப்பாடு எமக்குள்ளது – உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் தெரிவிப்பு!
Monday, February 7th, 2022
இலங்கைக்கு ஆதரவளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பகுதியில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில் – உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. நான் முக்கிய அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தேன், உற்பத்தித் திறன் கொண்ட நாடுகளின் செயல்திறன் மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தினேன்.
கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார மன்றத் கூட்டத்திலும் பங்கேற்றேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கைக்கு ஒத்துழைக்க கடமைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை நடுக்கடலில் பெயர்ப் பலகை!
மடு அன்னை தேவாலயத்தினை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார் பிரதம...
நாடாளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை கூடும்!
|
|
|


