இலங்கைக்காக ரூ. 97 மில்லியன் தேவைப்படுகிறது – ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்!

Thursday, February 16th, 2017
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனின் அலுவலகத்தின் கருத்துப்படி, இலங்கை தொடர்பான அதன் பணிகளுக்கு, 648,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 97.58 மில்லியன் ரூபாய்) தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா இடங்களிலுமுள்ள அனைத்து மக்களுக்குமான சேவைகளைப் புரிவதற்கு, தமக்குத் தேவைப்படும் செலவை ஈடுசெய்வதற்குரிய அன்பளிப்புகளை மேற்கொள்ளுமாறு, நாடுகளுக்கும் தனியார் கொடையாளர்களுக்கும், அவ்வலுவலகம் கோரியுள்ளது.  “எங்களுடைய உலகம், அளவுக்கரிய நிலையற்ற தன்மைக்குள் சென்றுள்ளது.பல நாடுகளில், சட்டங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வெளிநாட்டவர் மீதான வெறுப்பு, இன, சம பாகுபாடுகள் ஆகியன, வழக்கமானவையாக மாறியுள்ளன.
ஒவ்வொரு நாளும், மிகவும் விரிவடைந்தனவாகவும் மிகவும் ஆழமானவையாகவும் அவை மாறி வருகின்றன” என, உயர்ஸ்தானிகர் ஹுஸைன் தெரிவித்தார்.  “முரண்பாடுகளையும் வேறு பெயர்களில் நடத்தப்படும் போர்களையும் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் தீர்த்துவைப்பதற்கும் தவறியமை, பயங்கரமான தீவிரவாதக் குழுக்களுக்கு உதவுகின்றன. அவற்றின் காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும் தங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட்டுச் செல்வது உள்ளிட்ட அதிர்ச்சிகரமான மனித வருந்துதலையும் ஏற்படுத்தியுள்ளன” என்றார்.
 மனித உரிமைகளுக்கான ஐ.நா அலுவலகம், 60 கள  நிலைகள் ஊடாகவும் ஏனைய சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் இணைப்புகளூடாகவும், மக்களின் வாழ்வில், உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உழைக்கிறது.  இவ்வாண்டிஎல் தனது பணிகளுக்காக, பாதீட்டுக்கு மேலான 252.9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை, அவ்வலுவலகம் எதிர்பார்த்துள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா அலுவலகத்துக்கான வழக்கமான ஐ.நாவின் ஒதுக்கீடான 107.56 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாகவே, இந்தத் தொகை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

syed-al-hussein

Related posts: