இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை – பிரதமரினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, September 29th, 2020
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் முன்வைத்திருந்தார்.
இந்நிலையிலேயே மஹிந்தவினால் முன்மொழியப்பட்ட, மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி!
கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை - தெற்காசிய நாடுகளில் இலங்கையே முன்னணியில் – ஜனாதிபதி பெருமிதம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப் பணி - இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடு...
|
|
|


