இறந்த காவலரின் உடலை ஏந்தி போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்!

ஜோர்டானில் கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக, பல பகுதிகளில் பாரிய போராட்ட அலைகள் தோன்றியுள்ளதுடன், அங்கு இடம்பெற்ற கலவரங்களில் ஒரு காவல்துறை அதிகாரியும் உயிரிழந்தார்.
வாழ்க்கைச் செலவை சௌகரியமான நிலைக்குக் குறைக்குமாறு கோரி நேற்றும் (16) நேற்று முன்தினமும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அதனை அடக்கச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜோர்டானின் மான்ஹி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்த மறுநாளே ஜோர்டானில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், போராட்டக்காரர்கள் காவல்துறை உத்தியோகத்தரின் உடலத்தை உயர்த்தி தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|