இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 7th, 2021

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பெரிய வெங்காயம் சந்தைக்கு கிடைக்கப் பெற்று வரும் நிலையில் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது.

உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்புள்ள உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க இறக்குமதி வரியை விதிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் அரசாங்கத்திடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: