இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்து!
Thursday, September 30th, 2021
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் தீர்வை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச நிறுவனங்களுக்கு 500 தகவல் உத்தியோகத்தர்களை நியமிக்க முயற்சி!
இலங்கை புகைப்படக்கலைஞருக்கு சர்வதேச விருது!
உலக சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்து!
|
|
|


