இருவேறு இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் சமல் ராஜபக்ஷ!

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்நாட்டலுவல்கள் இராஜங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாபதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சானது, தேசிய பாதுகாப்ப – அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனியான இராஜங்க அமைச்சாகவும், உள்நாட்டலுவல்களுக்கு தனியான இராஜாங்க அமைச்சராகவும் வேறாக்கப்பட்டுள்ளது.
இவ் இருவேறு இராஜாங்க அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சராகவே சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார்.
இதுவரை காணப்பட்ட தேசிய பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சானது, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் என இரு இராஜாங்க அமைச்சுக்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|