இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் புதிய இலத்திரனியல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் அறிமுகம்!

Saturday, September 2nd, 2023

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான இலத்திரனியல் தளத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோர் இந்த இலத்திரனியல் பின்தொடர்தல் பொறிமுறையை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர்.

இலங்கைக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பான உறுதியான பின்தொடர்தல், நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் விரிவான செயற்றிறன் மதிப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதே இந்த இலத்திரனியல் தளத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: