இராணுவ பொது மன்னிப்பு காலம் மேலும் நீடிப்பு!
Saturday, May 11th, 2019
இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காகக் கொண்டு இராணுவத்தின் பொதுமன்னிப்பு காலத்தினை மேலும் ஒரு கிழமை நீடித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய வேளை தமக்குரிய தலைமையக சேவைக்கு சமூகமளிக்க தவறிய படையினருக்கு மே மாதம் 17ஆம் திகதி அன்று மாலை 06.00 மணி வரையில் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் பொது மன்னிப்பு காலமானது ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடங்களை புதுப்பித்து மீள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2903 ஆக அதிகரிப்பு - அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை - விவசாய அமை...
|
|
|


