இராணுவப் புரட்சி ; மாலியில் ஜனாதிபதி விலகல் – நாடாளுமன்றம் கலைப்பு!

Wednesday, August 19th, 2020

மேற்கு ஆபிரிக்க நாடான மாலி நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அந்நாட்டு இராணுவம் கைது செய்து நாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து, ‘தனக்காக இரத்தம் சிந்தப்படக்கூடாது’ என தெரிவித்து இராணுவ காவலில் உள்ள அந்நாட்டு ஜனாதிபதி பதவி விலகுவதுடன், நாடாளுமன்றையும் கலைப்பதாக அறிவித்துள்ளார்.

நேற்று (17) மாலி இராணுவம் திடீர் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றியதுடன், ஜனாதிபதி இப்ரஹிம் பவுபக்கர் கெய்ட்டா மற்றும் பிரதமர் மெய்கா பவ்புபோ சிசே ஆகியோரை ஆயுதமுனையில் சிறைபிடித்து தமது காவலில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவ காவலில் இருந்தவாறு அரச தொலைக்காட்சியில் பேசிய ஜனாதிபதி, ‘நான் பதவி விலகுகிறேன். நாடாளுமன்றமும் கலைக்கப்படுகிறது. எனது அதிகாரத்துக்காக இரத்தம் சிந்தப்படுவதை விரும்பவில்லை’ என்று அறிவித்தார்.

அந்நாட்டு ஜனாபதி கெய்டா, 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றி ஜனாதிபதியான நிலையில், ஊழல், தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் பிற காரணங்களினால் அண்மையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன். இந்தப்பின்னணியிலேயே இந்த இராணுவச் சதிப் புரட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts: