இராஜாங்க அமைச்சுகளை ஏற்ற சு.கவின் உறுப்பினர்களை நீக்க கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை!
Thursday, September 8th, 2022
கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 4 பேர் இன்று இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர்.
மேலும், அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக துமிந்த திஸாநாயக்க காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே குறித்த ஐவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
000
Related posts:
நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலையின் துறைசார் வைத்திய ...
இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை - சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உ...
யாழ்ப்பாணம் செல்ல முன்பதிவுகளை செய்யலாம் - ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


