இரண்டு நாள் விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு நிகழ்வகளிலும் பங்கேற்பு!
Saturday, March 19th, 2022
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் மாவட்டத்தின் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
பிரதமரின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் பொலிசாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!
ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர் சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?
20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!
|
|
|


