இரண்டு கோடி 50 இலட்சம் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பம்!
Tuesday, January 3rd, 2017
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இது அடுத்த மாதம் 12ம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஜனவரி 21ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறும்.
இம்முறை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக 62 ஆயிரம் மதிப்பாட்டாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்திலும் பார்க்க இந்த எண்ணிக்கை அதிகமாகும். இரண்டு கோடி 50 இலட்சம் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். வரலாற்றில் ஆகக்கூடுதலான மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!
யாழ் பேருந்து நிலைய காவலாளிக்கு கத்திக்குத்து: யாழ் பஸ்நிலையத்தில் பதற்றம்!
மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை - சுகாதார அ...
|
|
|


