இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடையவுள்ளதாக அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 15th, 2024

2 ஆம்  தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ” 2024 ஆம்  ஆண்டுக்கான தமிழ், சிங்கள மொழி அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (16) வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளை,மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் (26) ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: