இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்!
Monday, April 5th, 2021
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 29 ஆம் திகதி தொடக்கம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.
எனினும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை இன்று தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலாத்துறைத் திணைக்களம்!
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்!
எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் - அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர...
|
|
|


