இரணைமடு பகுதில் இருந்து இராணுவம் வெளியேறியது!

இரணைமடு குளத்தின் அருகில் நிலைகொண்டிருந்த இராணுவம், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த பகுதியில், நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிகளை கைவசப்படுத்தி இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டிருந்தனர்.அத்தோடு, இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதிக்கு சுற்றுலாவாக வருகைதரும் பிரயாணிகளுக்கு, சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்தனர்.
இதனால், அப்பகுதி மக்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்ததோடு, இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகவும் காணப்பட்டது. இதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆலோசனைகளின் பிரகாரம், அவ்விடத்திலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி பங்கெடுப்பு!
உர நெருக்கடியால் சீனா - இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது - இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ...
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச...
|
|