இரணைமடு தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்!
Saturday, December 29th, 2018
இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நியமித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவையே ஆளுநர் நியமித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு சடுதியாக உயர்ந்த போதும் குளத்தின் வான்கதவுகள் உரிய நேரத்தில் திறக்கப்படாது விட்டதனால் இந்த வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டது எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளை முன்னெடுக்கவே இவ் விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இனவாத அரசியலில் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் - அமைச்சர் பைசர் முஸ்தபா
உணவு விசம் – யாழில் 7 வயது மாணவன் பலி!
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் - தவறவிட வேண்டாம் என தமிழ் தரப்பினர...
|
|
|


