இரணைதீவு கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு!
Monday, February 28th, 2022
கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதான 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை விதித்த நீதிவான், அவர்களை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.
கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் சடடவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், குறித்த 12 இந்திய மீனவர்களும் கடந்த 13 ஆம் திகதி கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Related posts:
இரு கட்டங்களில் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு!
இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா தீர்மானம்!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பம்!
|
|
|


