இரட்டைக் குடியுரிமை பெறுவோருக்கு வாக்குரிமை தவிர்ந்த அனைத்து உரிமைகளும் கிடைக்கும்!

Saturday, April 9th, 2016
வாக்களிக்கும் உரிமை தவிர்ந்த ஏனைய அனைத்து உரிமைகளும் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வோருக்கு வழங்கப்படும் என உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்னதெரிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக விண்ணம் செய்தவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும்நிகழ்வு ஒன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில்நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்-
19ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வாக்களிப்பதற்கான உரிமையை மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுவோர் கோர முடியாது. ஏனைய அனைத்து உரிமைகளும் வழங்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டல்களுக்கு அமைய இரட்டைக் குடியுரிமை வழங்குவது கிரமமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.
இரட்டைக் குடியுரிமை கோரும் எவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.1987ஆம் ஆண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.1987ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 40000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய நடைமுறையின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுகின்றது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 6225 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, இத்தாலி, அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, சுவீடன் உள்ளிட்ட பல நாடுகளின் பிரஜைகளுக்கு இவ்வாறு இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: