இம்மாத இறுதியிலிருந்து ஓட்டோக்களுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை!
Thursday, April 12th, 2018
ஓட்டோக்களுக்கு கட்டண அறவீட்டு மீற்றர் பொருத்துவது இந்த மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளது என வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஓட்டோ சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.
கட்டண மீற்றர் கடந்த முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என ஓட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கூறினார்.
Related posts:
நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெர...
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை - ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரி...
சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது - இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்க...
|
|
|


