இம்மாதம் இம்மாதம் 21ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை !
Tuesday, February 7th, 2017
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த செயன்முறை பரீட்சை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் ஏனைய விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டுள்ளனதாகவும் அவர் கூறினார்.
நடனம், சங்கீதம், நாட்டியம், அரங்ககேற்றம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருக்கிறார்கள். இதற்கென நான்காயிரத்து 500 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கான பயிற்சிகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

Related posts:
கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!
நாடாளுமன்ற மோதல் குறித்த அறிக்கையை 02 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்திய...
|
|
|


