இன்று முன்னிரவு 8 மணிமுதல் 57 மணி நேரம் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Friday, April 24th, 2020

இன்று 24 ஆம் திகதி முன்னிரவு 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படு அவசியமற்ற அனைத்து செய்ற்பாடுகளும் வரும் 57 மணி நேரம் முடக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அனர்த்த வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவிர்ந்த பகுதிகளில் நாளாந்தம் அதிகாலை 05 மணி தொடக்கம் முன்னிரவு எட்டு மணிவரை  கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு  உத்தரவு அமுல்படுத்தப்படுள்ளதுடன் குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் முற்றாகத் தடையும்  விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய பகுதிகளில் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முன்னிரவு 8 மணி தொடக்கம் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தொடர்ச்சியாக 57 மணி நேரம் தெர்டர்ச்சியாக அமுலில் இருக்கும்  எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: