இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைகிறது!
Thursday, November 8th, 2018
இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க சகல பேருந்து சங்கங்களும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும், 12 ரூபா என்ற ஆரம்ப கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் சொகுசு ரக மற்றும் அரை சொகுசு ரக பேருந்து பயண கட்டணங்களில் எந்தவித மாற்றமும் நிகழாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பீ ஹேமசந்ர தெரிவித்துள்ளார்.
இதேநேரம், அதிவேக பாதைகளில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்களின் பயண கட்டணங்களை சீர்த்திருத்துவது தொடர்பில் எதிர்வரும் கலந்துரையாடலின் போது ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், அரச போக்குவரத்து சேவை கட்டணங்களும் இன்று நள்ளிரவு முதல் 2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


